செய்திகள்,திரையுலகம் பாடல் முழுக்க ஹீரோவுக்கு முத்தம் கொடுத்த நாயகி…

பாடல் முழுக்க ஹீரோவுக்கு முத்தம் கொடுத்த நாயகி…

பாடல் முழுக்க ஹீரோவுக்கு முத்தம் கொடுத்த நாயகி… post thumbnail image
சென்னை:-விதார்த், சூரி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பட்டையக் கௌப்பணும் பாண்டியா’. இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்த ‘சுறா’ படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார்.

அருள் தேவ் இசையில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ராதாரவி, விதார்த், சூரி, நடிகை மனிஷா ஜித் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.இந்த சந்திப்பின்போது இயக்குனர் கூறியதாவது:

‘பட்டையக் கௌப்பணும் பாண்டியா’ படத்தில் விதார்த் டிரைவராகவும், சூரி கண்டக்டராகவும் வருகிறார். ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யா-சந்தானம் ஜோடி போல், இந்த படத்திலும் விதார்த்-சூரி ஜோடி படம் முழுக்க வருகிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது.இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் முழுக்க நாயகி, நாயகனுக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்கியுள்ளோம். இந்த பாடலில் நடிக்க மனிஷா யாதவ் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி