என்னுடன் நடிக்கும் அனுபவம் ஸ்ருதிக்கு போதாது-கமல்…

விளம்பரங்கள்

சென்னை:- விஸ்வரூபம் 2ம் பாகம் படத்தை முடித்த கையோடு உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார். இதில் கமல் மகள் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. தற்போது அதிலிருந்து அவர் வெளியேறிவிட்டார்.

இதுபற்றி கமல் கூறியதாவது: உத்தமவில்லன் படத்தில் என்னுடன் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது கால்ஷீட் தேதி ஒத்துவரவிரவில்லை. ஒருவகையில் அது நல்லதுதான். இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்ருதியும் நானும் சேர்ந்து நடிப்பது என்பது போதிய அவகாசம் இல்லாத சூழலாக உள்ளது.அப்படி சேர்ந்து நடித்தால் அது எங்கள் இருவர் மீதும் மிகுந்த எதிர்ப்பார்ப்பையும், மிகுந்த அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும்.

சினிமாவில் அவர் இன்னும் சில காலம் அனுபவம் பெற்ற பிறகு என்னுடன் நடிப்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். படத்தில் அவர் எனது மகளாகவே நடிக்கவிருந்தார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிப்பார். இதற்காக 3 பேரை தேர்வு செய்துவைத்திருக்கிறோம். அவற்றில் பொருத்தமானவர் நடிப்பார். எனது மகனாக புதுமுக நடிகர் நடிப்பார். இவ்வாறு கமல் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: