ஆபாச படத்தில் நடித்த மாணவன்…

விளம்பரங்கள்

அமெரிக்கா:-ராபர்ட் மறுக்கி என்ற 18 வயது புளோரிடாவை சேர்ந்த மாணவர், ‘காகா ஹை ஸ்கூல்‘ என்ற பள்ளியில் படித்து வந்தார். அவர் தனது குடும்ப ஏழ்மை சூழ்நிலை காரணமாக பணத்திற்காக ஆபாச படங்களில் நடித்தார். இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததும் உடனடியாக பள்ளி நிர்வாகம் மாணவனை டிஸ்மிஸ் செய்தது.

ராபர்ட் மறுக்கியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் தனது மகனுக்காக வாதாடியுள்ளார். சட்டத்திற்கு புறம்பாக தனது மகன் எதையும் செய்யவில்லை என்றும், ஆபாச படங்களில் நடிப்பதை சட்டமே அனுமதித்துள்ளது என்றும், இதை காரணம் காட்டி தனது மகனை பள்ளியில் இருந்தது நீக்கியது தவறான முன்னுதாரணம் என்றும் எவ்வளவோ வாதாடியும், பள்ளி நிர்வாகம் மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது.

ஆபாச படங்களில் நடிப்பதை சட்டம் அனுமதித்திருந்தாலும், பள்ளியின் ஒழுக்க கட்டுப்பாட்டை மாணவன் மீறிவிட்டதால் டிஸ்மிஸ் செய்துள்ளோம் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது.இந்த விஷயம் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து விட்டதால் வேறு எந்த பள்ளியும் அந்த மாணவனை சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்போவதாக மாணவனின் தாய் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: