செய்திகள்,திரையுலகம் படப்பிடிப்பில் விபத்து ஷாருக்கானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை…

படப்பிடிப்பில் விபத்து ஷாருக்கானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை…

படப்பிடிப்பில் விபத்து ஷாருக்கானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை… post thumbnail image
மும்பை:-நடிகர் ஷாருக்கான் இந்தியில் ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். அபிஷேக் பச்சன், போமன் இரானி, சோனு சூத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குனரான பராகான் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூஹு பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடந்தது. இதில், ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது, படப்பிடிப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு கதவு ஷாருக்கான் மேல் திடீரென விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த ஷாருக்கானை படக்குழுவினர் மீட்டு உடனடியாக நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவருக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். அவரது உடம்பில் காயங்கள் இருப்பதால் அதற்கு மருத்துவர்கள் தையல் போட்டுள்ளனர். தற்போது, ஷாருக்கான் வெகுவாக உடல்நலம் தேறி வருகிறார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி