செய்திகள்,திரையுலகம் சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு…

சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு…

சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு… post thumbnail image
சென்னை:-சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக,கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாஸ் தலைமை தாங்கினார்.

போலீஸ் தரப்பில் இணை கமிஷனர்கள் திருஞானம், சங்கர், சண்முகவேல் துணை கமிஷனர்கள் கிரி, பகலவன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். சினிமா தியேட்டர் மானேஜர்கள் சுமார் 75 பேர் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.கூட்டம் முடிந்ததும், ஆல்பட் தியேட்டர் மானேஜர் மாரியப்பன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தியேட்டர்களில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் தரப்பில் சில அறிவுரைகள் வழங்கினார்கள். போலீசார் சொன்ன அனைத்து ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டோம். தியேட்டர் வாசல், டிக்கெட் கவுண்டர்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் போன்றவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கூறி உள்ளனர். படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் சோதனை நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சோதனை நடத்தும்போது ரசிகர்களிடம் தொல்லை கொடுக்காமல் பார்த்துக்கொள்ளவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து, அதில் பதிவாகும் காட்சிகளை பார்ப்பதற்கு, கட்டுப்பாட்டு அறை ஒன்றையும், அமைத்திட போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். போலீஸ் தரப்பில் சொன்ன அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திடுவோம் என்று, திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் உறுதி கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி