‘ஜில்லா’100 கோடி வசூல் போஸ்டரால் இன்கம்டாக்ஸ் பயத்தில் தயாரிப்பாளர்…

விளம்பரங்கள்

சென்னை:- ‘ஜில்லா‘ படத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் அக்கவுண்ட்டில் ஒரே வாரத்துக்குள் 100 கோடி ரூபாயை ஜில்லாவசூல் செய்து விட்டது என்று ஒரு பெரிய சைஸ் போஸ்டரை டிசன் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியோ இப்போது உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.

பொதுவாக ஒரு படம் ரூ 100 கோடி வசூலைத் தொட வேண்டுமென்றால், உலகம் முழுக்க 3500 தியேட்டர்களில் ரிலீசாகி ஒரு வாரத்துக்கு மேல் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருக்க வேண்டும். அப்போதுதான் இந்த 100 கோடி வசூல் சாத்தியமாகும்.ஆனால் விஜய்யின் படமோ அதிகபட்சமாக 1200 அரங்குகளில் தான் ரிலீஸ் செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி குறிப்பிட்டுள்ளார். படத்தை வாங்கிய டிஸ்ட்ரிபியூட்டர்களோ, 1075 அரங்குகளில்தான் ஜில்லாவை ரிலீஸ் செய்ததாக குறியுள்ளனர்.

ஆக இத்தனை குறைந்த தியேட்டர்களில் ரிலீஸ் செய்து விட்டு எப்படி ரூ 100 கோடி ரூபாயை ஒரே வாரத்தில் வசூல் செய்ய முடியும்? என்பதே நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது.அதனால் தான் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி இப்படி இல்லாத வசூலை போஸ்டர் அடிச்சி ஒட்டினா நாளைக்கு இன்கம்டாக்ஸ்காரங்க கேள்வி மேல் கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்றது என்று செமக்கடுப்பில் இருக்கிறாராம் ஆர்.பி.செளத்ரி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: