செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்…

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்…

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்… post thumbnail image
ஹைதராபாத்:-தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். 90 வயதான அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் மரணமடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.நாடக நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கிய நாகேஸ்வரராவ். 1941ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 256 படங்களில் நடித்துள்ள அவர் தேவதாஸ், ஓர் இரவு, மாயக்கண்ணி, பூங்கோதை, மாதர்குல மாணிக்கம், எங்கவீட்டு மகாராணி, அலாவுதீனும் அற்புத விளக்கும், வாழ்க்கை ஒப்பந்தம் உள்பட 15 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக இட்டாரு மித்ரு என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தவர் இவர்தான். சிவாஜி நடித்த நவராத்திரி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் 9 வேடங்களில் நடித்தார்.ஆந்திரத்து எம்.ஜி.ஆர். என்.டி.ராமராவ் என்றால் சிவாஜியாக இருந்தவர் நாகேஸ்வரராவ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி