செய்திகள்,விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபனில் ‘நடப்பு சாம்பியன்’ அதிர்ச்சி தோல்வி…

ஆஸ்திரேலிய ஓபனில் ‘நடப்பு சாம்பியன்’ அதிர்ச்சி தோல்வி…

ஆஸ்திரேலிய ஓபனில் ‘நடப்பு சாம்பியன்’ அதிர்ச்சி தோல்வி… post thumbnail image
மெல்போர்ன்:- மெல்பெர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக், சுவிட்சர்லாந்தின் ஸ்டெனிஸ்லஸ் வாவ்ரிங்காவுடன் மோதினார்.

4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில், வாவ்ரிங்கா 2-6, 6-4, 6-2, 3-6, 9-7 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அடுத்து அரையிறுதியில், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்த்து வாவ்ரிங்கா விளையாட உள்ளார்.முன்னதாக தாமஸ் பெர்டிச், ஸ்பெயின் வீரர் டேவிட் ஃபெரரை 6-1, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். கனடா வீரர் போசர்டும் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில், செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா போன்ற முன்னணி வீராங்கனைகள் தோல்வியடைந்து ஏற்கனவே போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், சீனாவின் லி நா காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி