நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகர்…

விளம்பரங்கள்

மதுரை:- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் உள்ள திருமணமண்டபத்தில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளார் சாந்தி பூஷன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான கார்த்திக் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டார்.தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலின் போது மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதனை மூடி மறைக்கவே தற்போது நடு ரோட்டில் போராட்டம் நடத்துகின்றனர். இது அரசியலுக்கே தவறான முன் உதாரணமாகும்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதில் வாக்காளர்களுக்கு அதிக பொறுப்பு உணர்வு உண்டு. காரணம் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளும் மக்கள் கட்சி உருவாக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகின்றன. அப்போது இல்லாத சந்தோஷம் இப்போது எனக்கு உள்ளது. இதற்கு காரணம் அனைத்து தரப்பு மக்களும் எங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: