செய்திகள்,திரையுலகம் பெண்கள் மத்தியில் என் இமேஜை கெடுக்க நினைத்த சமந்தா-மகேஷ் பாபு…

பெண்கள் மத்தியில் என் இமேஜை கெடுக்க நினைத்த சமந்தா-மகேஷ் பாபு…

பெண்கள் மத்தியில் என் இமேஜை கெடுக்க நினைத்த சமந்தா-மகேஷ் பாபு… post thumbnail image
ஹைதராபாத்:-மகேஷ்பாபு நடித்திருக்கும் தெலுங்கு புதிய படம் நெனோகடேய்னே. இப்படத்தில் மகேஷ்பாபுவின் பின்னால் மண்டியிட்டபடி அப்பட நாயகியான கீர்த்தி சனோன் செல்வது போன்று வெளியான போஸ்டருக்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கதாநாயகியை நாய் போன்று நடக்க விட்டு கேவலப்படுத்தி விட்டனர் என்று கூறியிருந்தார்.

இதனால், மகேஷ்பாபுவும், அவரது ரசிகர்கள் கொதித்தெழுந்து விட்டனர். சமந்தாவுக்கு எதிராக இணையதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு பிரச்னையை பெரிதாக்கினர். அதன்பிறகு சித்தார்த் உள்பட சிலர் சமந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிறகே அந்த பிரச்னையை விட்டார் மகேஷ்பாபு.இந்நிலையில், மீண்டும் அந்த பிரச்னை குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள மகேஷ்பாபு, சமந்தா சொன்ன கருத்து குறித்து பீல் பண்ணி பேசியுள்ளார். அதாவது, அந்த படத்தில் நாங்கள் செய்திருப்பது தவறாகவே இருக்கட்டும். அதை சமந்தா என்னிடத்தில் சொல்லியிருக்கலாம். அவர் எனது குடும்ப நண்பர் மட்டுமின்றி எனது மனைவி நம்ரதாவுக்கு நல்ல தோழி ஆவார்.

அதனால் என்னிடம் இல்லையென்றாலும், அவரிடமாவது அதுபற்றி சொல்லியிருக்கலாம். ஆனால், அதுபற்றிய கருத்தினை பேஸ்புக்கில் வெளியிட்டு பிரச்னையை பெரிதாக்கி விட்டார். யாரோ முன்ன பின்ன தெரியாதவர் பற்றி சொல்வது போன்றே கருத்தை வெளியிட்டு விட்டார் என்று கூறியுள்ள மகேஷ்பாபு, அவர் செய்த செயல், என் இமேஜை பெண்கள் மத்தியில் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே செய்தது போலவே இருந்தது என்றும் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி