அரசியல்,செய்திகள் தி.மு.க. ஒரு ‘சிரிப்பு கட்சி’ என நடிகர் தியாகு கிண்டல்…

தி.மு.க. ஒரு ‘சிரிப்பு கட்சி’ என நடிகர் தியாகு கிண்டல்…

தி.மு.க. ஒரு ‘சிரிப்பு கட்சி’ என நடிகர் தியாகு கிண்டல்… post thumbnail image
திருவாரூர்:-திருவாரூரில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில், தமிழக உணவுத் துறை அமைச்சர், காமராஜ் பேசியதாவது: திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதி, நாட்டு மக்களை ஏமாற்றியவர். தற்போது தொகுதி மக்களையும் ஏமாற்றி வருகிறார்.

திருவாரூர் நகராட்சி மூலம், பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தும், முதல்வர், ஜெயலலிதா அரசை கொச்சைப்படுத்தும் வகையில், சிலர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு திரணி இருந்தால், எம்.எல்.ஏ., கருணாநிதியை, தொகுதி பக்கமே காணவில்லை என, உண்ணாவிரதம் இருக்கட்டும் பார்க்கலாம். இவ்வாறு, காமராஜ் பேசினார்.

கூட்டத்தில், திரைப்பட நடிகர், தியாகு பேசியதாவது: கால் நூற்றாண்டு காலம், தி.மு.க.,வுக்காக உழைத்தேன். ஆனால், எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர்கள் மட்டுமே கோடி கோடியாக சம்பாதித்து வைத்துக் கொண்டனர். குடும்ப பிரச்னைகளுக்குத் தீர்வு காண தெரியாதவர், நாட்டு மக்களைப் பற்றி எப்படி சிந்திப்பார்? பெரியார், அண்ணாவின் சுயமரியாதை, தி.மு.க.,வில் இழக்கப்படுகிறது. நடிகர் வடிவேலுவுக்கு, அழகிரி, 5 கோடி ரூபாய் கொடுத்து, தி.மு.க.,வில் சேர்த்தார். அதனால், தி.மு.க., தற்போது சிரிப்பு கட்சியாகி விட்டது. சுயமரியாதை உள்ள யாரும், தி.மு.க.,வில் இருக்க மாட்டார்கள்; தன் மானம் உள்ளவர்கள் விலகி வருகின்றனர். இவ்வாறு, தியாகு பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி