செய்திகள்,விளையாட்டு ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பட்டியல்…

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பட்டியல்…

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பட்டியல்… post thumbnail image
துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது.

131 தரநிலைப் புள்ளிகள் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது. 117 புள்ளிகளுடன் இந்திய அணி 2ம் இடத்திலும், 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாமிடத்திலும் உள்ளன. இங்கிலாந்து 4-வது இடத்தில் (107 புள்ளி) உள்ளது.

சார்ஜாவில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி வென்று, தொடரை 1-1 என சமன் செய்தது. இதனால் அந்த அணி 2 தரநிலைப் புள்ளிகளை இழந்து, 5-வது இடத்தில் நிலைபெற்றது. இலங்கை அணி 3 ரேட்டிங் புள்ளிகளை பெற்றபோதும், தரநிலையில் 6-வது இடத்திலேயே உள்ளது.

அணிகளின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்:-

1.தென் ஆப்ரிக்கா 133
2.இந்தியா 117
3.ஆஸ்திரேலியா 111
4.இங்கிலாந்து 107
5.பாகிஸ்தான் 100
6.ஸ்ரீலங்கா 90
7.வெஸ்ட் இண்டீஸ் 87
8.நியூசிலாந்து 82
9.ஜிம்பாப்வே 34
10.பங்களாதேஷ் 18

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி