முதன்முதலாக இணையும் வைரமுத்து – யுவன்…

விளம்பரங்கள்

‘பையா’, ‘வழக்கு எண் 18/9, ‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை தயாரித்து, ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தை இயக்கிய சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் முதன் முறையாக விஜய் சேதுபதி – விஷ்ணு ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இயக்கத்தில் ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்தில் ஏற்கெனவே நடித்துள்ளார். அதேபோல், விஷ்ணுவும் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘நீர்ப்பறவை‘ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் சீனு ராமசாமியுடன் இவர்கள் இணைந்துள்ளனர். கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் லிங்குசாமி இருவரின் விருப்பத்தினை ஏற்று யுவன் சங்கர் ராஜா, வைரமுத்து கூட்டணி இப்படத்திற்காக முதன் முறையாக இணைகிறது. படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே எழுதுகிறார்.

வைரமுத்துவும், யுவன்ஷங்கர் ராஜாவும் முதன் முதலாக இணையும் படம் இது என்பதால் இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் கொடைக்கானலில் தொடங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: