செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 1980களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு…

1980களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு…

1980களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு… post thumbnail image
சென்னை:-1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சென்னையில் ஒரே இடத்தில் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் 1980–ம் வருடத்தில் நட்சத்திரங்கள் என்ற பெயரில் தனியாக அமைப்பு வைத்துள்ளனர். வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 2009–ல் முதல் சந்திப்பு நடந்தது. நடிகைகள் லிசியும், சுகாசினியும் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் இந்த குதுகல சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த வருடத்துக்கான சந்திப்பு நேற்று முன்தினம் இரவு சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை அருகில் உள்ள மலையாள நடிகர் மோகன்லால் பண்ணை வீட்டில் நடந்தது. அவரே விருந்துக்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராக காரில் வந்து இறங்க மோகன்லால் வரவேற்றார்.ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வெங்கடேஷ், மோகன், சுமன், ரமேஷ் அரவிந்த், அம்பரீஷ், நடிகைகள் ராதா, அம்பிகா, ரேவதி, நதியா, ரம்யாகிருஷ்ணன், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், சுகாசினி, லிசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர்–நடிகைகள் மட்டுமே இதில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கணவன், மனைவி, குழந்தைகளுக்கோ வெளியாட்களுக்கே அனுமதி இல்லை.

ஒவ்வொருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். ரஜினி, சிரஞ்சீவியை நடுவில் உட்கார வைத்து ‘குரூப்’ போட்டோவும் எடுத்துக் கொண்டனர். விருந்து முடிந்ததும் அனைவருக்கும் பரிசு பொருட்கள் கொடுத்து வழியனுப்பி வைக்கப்பட்டார்கள். இதுகுறித்து சுகாசினி கூறும்போது, ‘1980களில் நடித்த நடிகர்–நடிகைகள் முதன் முதலாக 2009–ல் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். வருடத்துக்கு இதுபோல அனைவரும் சந்தித்து பேசவேண்டும் என்று அப்போது யோசனை உருவானது. தொடர்ந்து இந்த சந்திப்பை நடத்தி வருகிறோம். டைரக்டர் உள்ளிட்ட பலர் எங்களையும் ஏன் அழைக்க கூடாது என்று கேட்டு வருகிறார்கள். நடிகர், நடிகைகளை மட்டுமே அழைப்பதென முடிவு செய்யப்பட்டு உள்ளது.பொது நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்திக்க நேர்ந்தாலும் நட்சத்திர வட்டத்துக்குள் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இங்கு அப்படி அல்ல. ஒருவருக்கொருவர் ஜோக் அடித்து மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி