செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திவாலான நகரம்…

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திவாலான நகரம்…

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திவாலான நகரம்… post thumbnail image
அமெரிக்கா:-மோட்டார் வாகனங்களின் உற்பத்தி இடமாகவும், அமெரிக்காவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 4-வது நகரமாகவும் ஒரு காலத்தில் டெட்ராய்ட் விளங்கியது. இந்த நகரத்தின் நிர்வாகம் தற்போது திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடன் அடிப்படையில் பெரிய நகராட்சிகளுள் ஒன்று திவாலாவதாக அறிவிப்பது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

டெட்ராய்ட்டின் சீர்குலைந்து வரும் நிதிநிலைமையைப் பரிசீலிக்க அரசு ஒரு நிதி மேலாளரை அந்த நகர நிர்வாகத்திற்கு அனுப்பியது. அவரது பரிந்துரையின் பேரிலேயே இந்த திவால் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு கடினமான முடிவாகும். ஆயினும், அறுபது வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதுவே வழியாகும் என்று அரசின் உயர் அதிகாரியான ரிக் ஸ்னிடர் தெரிவித்தார். நகர நிர்வாகத்தின் கடன் தொகை குறித்து ஒருவருக்கும் சரிவரத் தெரியவில்லை. ஆனால் அரசால் நியமிக்கப்பட்ட நிதி மேலாளரான கெவின் டி.ஓர்., 18 முதல் 20 பில்லியன் டாலர் வரை கடன்சுமை இருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

கடந்த 20-ம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் வரவு மூலம் வியத்தகு வளர்ச்சி கண்ட இந்த நகரம், பின்னர் அதே வேகத்தில் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது. 1950-களில் 18 லட்சம் மக்கள் வசித்த இங்கு தற்போது 7 லட்சம் மக்களே வசித்து வருகின்றனர். நகர நிர்வாகங்கள் திவாலாவது என்பது அரிதான விஷயம் என்பதால் இந்த நகரத்தின் மறுமலர்ச்சியும் கேள்விக்குறியாகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி