அஜித்தின் சம்பளம் 25 கோடி!…

விளம்பரங்கள்

சென்னை:-ரஜினி, கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்டநிலையில், இளைய தலைமுறை நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, திரைத்துறையினரின் மத்தியிலும் உண்டு. அதற்கான விடையாக, நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேட்டியளித்தார் அஜித்.

அவரது கருத்து அப்போது விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை அஜித். இதற்கிடையில் யங் சூப்பர் ஸ்டார், ஓல்டு சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சிம்பு போன்றவர்கள் சுய (தம்)பட்டத்தோடு கிளம்பினார்கள். இன்னொரு பக்கம், விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக்க அவரது அப்பாவின் மூலம் சில பல காய்நகர்த்தல்கள் நடைபெற்றன. ஊடகங்களின் உதவியுடன் இப்படி எல்லாம் செட்டப் செய்தாலும், விஜய் நடித்த படங்களின் தொடர் தோல்வி அவர்களின் முயற்சியை காலி பண்ணிவிட்டது. விஜய்யின் கதை இப்படி என்றால், ;நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்என்று சொன்ன அஜித்தோ, நடிப்பில் கவனம் செலுத்தாமல் கார் ரேஸ், பைக் ரேஸ் என்று திசைமாறிச் சென்றார்.

நல்லவேளை, கண்கெடுவதற்கு முன்பே சூரியநமஸ்காரம் செய்ய, அதாவது நடிப்பில் கவனம் செலுத்த திரும்பி வந்தார். பில்லா 2 போன்ற சில தோல்விப்படங்கள் கொடுத்தாலும், சுதாரித்துக் கொண்டு சரியான இயக்குநர்களை, கதையை தேர்வு செய்து தொடர் வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார் அஜித். குறிப்பாக ஆரம்பம், வீரம் படங்களின் அதிரடி வெற்றியின் மூலம் தற்போது விஸ்வரூபமே எடுத்துவிட்டார் அஜித். இன்றைய தேதியில் சூர்யா, விஜய் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களையும்விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகி இருக்கிறார் அஜித். அவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா? 25 கோடி! நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னதை செய்து காட்டுவார் என நம்பலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: