செய்திகள்,திரையுலகம் ‘வீரம்’ படத்தை புகழும் சிம்பு…

‘வீரம்’ படத்தை புகழும் சிம்பு…

‘வீரம்’ படத்தை புகழும் சிம்பு… post thumbnail image
சென்னை:-டுவிட்டரில் கருத்து தெரிவித்த சிம்பு,தல அஜீத்தின் படத்தை முதல் நாளில் பார்க்க தவறியதற்காக வருந்துகிறேன். ஆனாலும் நேற்று தலயை தரிசித்துவிட்டேன். படம் மிகவும் சூப்பராக வந்துள்ளது.

சிறுத்தை சிவா, அஜீத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டு ரசிகர்களுக்கு ஏற்ற வண்ணம் படமாக்கியுள்ளார். வீரம் படத்தினை இன்னொரு முறை இன்றும் பார்க்க இருக்கின்றேன் என்று டுவிட் செய்துள்ளார். இதனால் அஜீத் ரசிகர்கள் உற்சாகமாகி அவர்களும் மீண்டும் ஒருமுறை பார்க்க இருப்பதாக அவருக்கு ரீடுவிட் செய்துள்ளனர்.மேலும், வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, காதலர் தினத்தில் ‘வாலு’ படத்தின் புதிய டிரைலரும், பாடல் வெளியீட்டு விழாவும் சென்னையில் மிக பிரமாண்டமாக நடக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் டுவிட்டரில் தெரிவித்தார்.

விழாவிற்கு கண்டிப்பாக ஹன்சிகா உள்பட படக்குழுவினர் அனைவரும் வருகை தருவார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். சிம்பு தற்போது வாலு, வேட்டை மன்னன், நயன் தாராவுடன் ஒரு படம், தனது தந்தை டி.ராஜேந்த்தரின் தயாரிப்பில் ஒரு படம் என நான்கு படங்களில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி