செய்திகள்,முதன்மை செய்திகள் தினந்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ்.களை கண்காணிக்கும் அமெரிக்கா…

தினந்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ்.களை கண்காணிக்கும் அமெரிக்கா…

தினந்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ்.களை கண்காணிக்கும் அமெரிக்கா… post thumbnail image
லண்டன்: அமெரிக்க உளவு அமைப்பின் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் எட்வர்டு ஸ்னோடென். இவர் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இதனால் அமெரிக்காவில் வாழ முடியாமல் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

உலகம் முழுதும் தினந்தோறும் மொபைலில் பயன்படுத்தும் 20 கோடி குறுந்தகவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு திரட்டி, கண்காணித்து வருவதாக தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.இத்தகவலை தி கார்டியன் நாளிதழும், சேனல் 4ம் பகிரங்கப்படுத்தி உள்ளன. குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள், யாருடன் தொடர்பு கொள்கின்றனர், அவர்களது கிரெடிட் கார்டு தகவல்கள் பற்றியும் அந்த அமைப்பு தகவல் திரட்டியது. மேலும் பிரிட்டிஷ் அரசுக்கும் அத்தகவல்களை அனுப்பி பரிசோதிக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பரிசோதிக்க அனுமதிக்கிறது. இதற்கு டிஷ்பையர் என்று பெயர் வைத்துள்ளனர்.

டிஷ்பையரின் பணியானது, குறுந்தகவல் அனுப்புவது, மிஸ்டு கால் அலர்ட், சர்வதேச ரோமிங் கட்டணங்கள் பற்றிய அனைவரின் தகவலையும் திரட்டி ஆய்வு செய்வதாகும். மேலும் அவர்களின் வங்கி கிரெடிட் கார்டு எண்ணையும் கண்காணிக்கிறது. இதுபற்றி அமெரிக்க அதிபர் நேற்று பேட்டி தருவதாக இருந்தது. ஆனால், ஸ்னோடென் திடீரென நேற்று முன்தினமே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி