செய்திகள்,திரையுலகம் டைரக்டரை பார்த்து காரித்துப்பிய நடிகை…

டைரக்டரை பார்த்து காரித்துப்பிய நடிகை…

டைரக்டரை பார்த்து காரித்துப்பிய நடிகை… post thumbnail image
சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளராக அறியப்பட்ட விஜய் மில்டன் பல வருடங்களுக்கு பிறகு ‘கோலி சோடா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தனது டைரக்‌ஷன் ஆசைக்கு தீனி போட்டிருக்கிறார்.ஏற்கனவே பரத்தை வைத்து பல வருடங்களுக்கு முன்பு டைரக்டர் சேரன் தயாரிப்பில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்ற படத்தை டைரக்ட் செய்திருந்தார்.

கோலி சோடா படத்தின் அறிமுக விழாவில் விஜய் மில்டன் பேசுகையில், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தின் தோல்விக்குப் பிறகு ஏன் நீங்க மறுபடியும் டைரக்‌ஷன் பண்ணல என்று யாரும் கேட்கவில்லை. அதனால் நானும் எந்தப் படமும் டைரக்ட் செய்யவில்லை. இந்தப் படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கும் போது கூட யாரும் எதுவும் சொல்லவில்லை என்றவர் மெரினா படத்தில் வரும் நான்கு பசங்களைப் போல இந்தப் படத்தையும் அவர் நான்கு பசங்களையும் ஒரு பெண்ணையும் வைத்துத்தான் படமாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்துல ‘ஏடிஎம்’ னு ஒரு பவர்ஃபுல்லான கேரக்டர் இருக்கு. அந்தக் கேரக்டர் எப்படின்னா தனுஷ் ஒரு படத்துல சொல்ற “எங்களை மாதிரி பசங்களையெல்லாம் பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்”ங்கிற டயலாக் மாதிரி தான். படத்தோட ஆரம்பத்துல இந்தப் பொண்ணை யாருக்கும் பிடிக்கக் கூடாது, ஆனா படம் முடியும் போது இவளை எல்லோருக்கும் பிடிக்கணும் அப்படித்தான் அந்த கேரக்டரை ரெடி பண்ணி வெச்சிருந்தேன்.அப்படி ஒரு கேரக்டருக்கு பொண்ணை தேடிக் கண்டுபிடிக்கிறது தான் எனக்கு ரொம்ப சேலஞ்சிங்கான விஷயமா இருந்துச்சு. எல்லா எக்ஸ்போர்ட் கம்பெனிகள் வாசல்லேயும், எல்லா கவர்மெண்ட் ஸ்கூல் வாசல்லேயும் போய் நின்னு பார்த்தும் யாரும் கெடைக்கல.

ஒருநாள் காலையில நான் கே.கே நகர்ல பைக்கில போய்க்கிட்டிருக்கிறப்போ சீதாங்கிற பொண்ணு பேக் மாட்டிக்கிட்டு ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்தா. பார்த்த உடனே இந்தப்பொண்ணு ஓ.கேன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா நேர்ல போய் பேசுறதுக்கு சங்கடமா இருந்துச்சு.உடனே என்னோட அசிஸ்டெண்ட்டுகளுக்கு போன் பண்ணி வரச் சொன்னேன். அவனுங்க யாருமே அந்த டைம்ல தயாரா இல்லாததுனால நானே பைக்கை தள்ளிக்கிட்டுப் போய் அந்தப்பொண்ணுக்கிட்ட யம்மா ஒரு நிமிஷம்னேன். உடனே அந்தப்பொண்ணு என்ன?ன்னு கேட்டா.
உம்பேரு என்னம்மா?ன்னு கேட்டேன்.

எதுக்கு..? ன்னு கேட்டா.
அய்யய்யோ தப்பாப் போச்சேன்னுட்டு அம்மா உங்க அப்பா போன் நம்பர் தர்றீங்களா..?ன்னு கேட்டேன்.அந்தப் பொண்ணு எதுக்குன்னு கேட்டா…இல்ல அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்னு சொன்னேன்.உடனே அந்தப் பொண்ணு ”த்த்தூ…”ன்னு காரித்துப்பிட்டா.அதைப் பார்த்ததும் என்ன ரியாக்‌ஷன் பண்றதுன்னே… எனக்கு தெரியல.இருந்தாலும் அந்தப் பொண்ணை நடிக்க வெச்சே ஆகணும்னு முடிவு பண்ணி அந்தப் பொண்ணை பாலோ பண்ணி அவங்க அப்பாக்கிட்ட பேசி ஓ.கே வாங்கினேன். அப்புறம் அவங்க வீட்டுக்குப் போனா அந்த பொண்ணோட அம்மாவே லிங்குசாமி சாரோட ஆபீஸ்ல பாத்திரம் தேய்க்கிறவங்க…ன்னு தெரிஞ்சது.

இப்படித்தான் சீதாங்கிற இந்த பொண்ணை நான் கோலிசோடா படத்துல நடிக்க வைக்க கஷ்டப்பட்டேன். முதல்நாள் ஆபீஸ்க்கு வரும்போதெல்லாம் மழையில நனைஞ்ச கோழி மாதிரி நின்னுச்சு. சுத்தமா நடிப்பே வரல. அப்புறம் போகப் போக நடிப்புல பிண்ணிட்டா.ண்டிப்பா படம் முடிஞ்சு வரும்போது அவளோட கேரக்டர் தான் பேசப்படும் என்று சொல்லி முடித்தார் விஜய் மில்டன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி