விஜய்யை திட்டிய ரசிகர்…

விளம்பரங்கள்

சென்னை:-‘ஜில்லா’ படத்தின் ரிலீசைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் கலந்துரையாட முடிவு செய்தார். இதற்காக அவருடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் நேற்று முன்தினம் 11:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அஜித் ரசிகர்களுடன் தனது ரசிகர்கள் மோத வேண்டாம். அது ஆரோக்கியமான விஷயம் அல்ல என்று ஆலோசனை கூறினார் விஜய்.பல கேள்விகளுக்கு சுவாரஷ்யமாக பதிலளித்துக் கொண்டே வந்தார். விஜய் அப்போது ரசிகர்கள் தங்களது வேலையையும், குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதைப்படித்த விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யை அவதூறாக திட்டியிருக்கிறார். ரசிகரின் இந்த செயலைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத விஜய் டென்ஷனாகி அத்தோடு அந்த உரையாடலில் இருந்து வெளியேறி விட்டாராம்.

இதுபற்றிய தகவல்களை அறிந்து கொள்ள நாம் விஜய்யின் பெர்சனல் பி.ஆர்.ஓ பி.டி செல்வக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது : அதைப்பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது சார் நான் வெளியில இருக்கேன் என்று சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: