தயாரிப்பாளராக மாறும் அஜித்?….

விளம்பரங்கள்

சென்னை:-ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு புதிய இயக்குனர், நடிகர்களை வைத்து படம் தயாரித்து வருகிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரையடுத்து அந்த பட்டியலில், தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்களும் சேர்ந்துள்ளனர். இவர்களெல்லாம் தங்களது பேனரில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள்.

இந்த பட்டியலில் விரைவில் அஜீத்தும் சேருகிறாராம். ஒரு நேரத்தில் தான் நடித்த படங்கள் சறுக்கி வந்தபோது, தன்னை வைத்து தைரியமாக படம் தயாரித்தவர்களுடன் சேர்ந்து தானும் பங்குதாரராக செயல்பட்ட அஜீத், இந்த முறை, தனக்காக தயாரிப்பாளராகவில்லையாம். நல்ல திறமையான நடிகர், டைரக்டர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தயாரிப்பாளராகிறாராம்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. என்றபோதும், தலயின் தாராள குணமறிந்த சில இளவட்ட ஹீரோக்கள் ஆதரவு கேட்டு தலசமூகத்தை நாடியுள்ளார்களாம். அதோடு, சில புதுமுக படைப்பாளிகளும் அணிவகுக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: