ஆஸ்கார் விருது பட்டியலில் இந்திய படம் ஒன்றுக்கும் இடமில்லை…

விளம்பரங்கள்

அமெரிக்கா:-சர்வதேச அளவில் சினிமாத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகி உள்ள படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

86-வது ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான இந்த தேர்வு பட்டியலை ஆஸ்கார் அகாடமியின் தலைவர் செரில் பூன் ஐசக்ஸ், நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஆகியோர் அறிவித்தனர்.இந்தப் போட்டியில் கிராவிட்டி மற்றும் அமெரிக்கன் ஹஸில் ஆகிய இரு படங்களும் தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து எந்த ஒரு சினிமா படமோ அல்லது நடிகர், நடிகைகளின் பெயரோ இடம் பெறவில்லை. சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவிலும் கூட இந்தியப் படமோ, இந்தியாவில் தயாரான வேறு எந்தப் படமோ இடம்பெறவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்திய திரைப்பட தொழில்நுட்பக்கலைஞர்கள் பெருமை சேர்த்து வந்தபோதும் கூட இந்த வருடப்பட்டியலில் ஒரு படம் கூட இடம் பெறாதது இந்தியத் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: