6 மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்-கருத்து கணிப்பு முடிவு…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு வடக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் செல்வாக்கு எப்படி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் இருக்கும் என்பது பற்றி ஏ.சி.நீல்சன் மற்றும் ஏபிபி நியூஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.

டெல்லி, மும்பை–தானே, குர்கான்–பரீதாபாத், காசியாபாத்–நொய்டா ஆகிய இடங்களில் இந்த கருத்து கணிப்பு நடந்தது.அதில் டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதியில் 6 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாரதீய ஜனதாவுக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும். காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையிலும் ஆம் ஆத்மி ஒரு தொகுதியை கைப்பற்றும் என்றும் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. மும்பையும் தானேயும் இணைந்த கிரேட்டர் மும்பையில் 10 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 6 தொகுதிகள் பாரதீய ஜனதா கூட்டணிக்கும், 3 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணிக்கும் கிடைக்கும். ஒரு தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காசியாபாத் மற்றும் நொய்டா அடங்கிய 2 எம்.பி. தொகுதியில் பாரதீய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு இடத்தை கைப்பற்றும். குர்கான் மற்றும் பரிதாபாத் அடங்கிய 2 எம்.பி. தொகுதியில் இரண்டையும் பாரதீய ஜனதா கைபற்றும்.

இதன்மூலம் இந்த பிராந்தியத்தில் உள்ள 21 தொகுதிகளில் காங்கிரசுக்கு 3 இடங்களே கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த முறை 17 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பாரதீய ஜனதாவுக்கு 9 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 8 இடங்களும் கிடைக்கும்.அதே சமயம் இந்த தொகுதிகளில் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டதற்கு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் நரேந்திரமோடிக்கு 12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஆனால் மும்பை–தானேயில் நரேந்திர மோடிக்கு அதிக ஆதரவு உள்ளது. அவருக்கு 51 சதவீதமும், கெஜ்ரிவாலுக்கு 18 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இங்கு ராகுல்காந்திக்கு 22 சதவீதம் ஆதரவு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: