செய்திகள்,திரையுலகம் ‘வீரம்’ படத்தால் வேட்டி விற்பனை அதிகரிப்பு…

‘வீரம்’ படத்தால் வேட்டி விற்பனை அதிகரிப்பு…

‘வீரம்’ படத்தால் வேட்டி விற்பனை அதிகரிப்பு… post thumbnail image
சென்னை:-நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரம் படத்தில் அஜீத் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து நடித்தார். அவரது அந்த நடையும் வேட்டியை மடித்துக்கட்டும் ஸ்டைலும் அவரது ரசிகர்களுக்கு மட்டுல்ல, கிராமத்து இளைஞர்களுக்கும் ரொம்பவே பிடித்து விட்டது.

வேட்டியிலிருந்து பேண்ட்டுக்கு மாறிக் கொண்டிருந்த இளைஞர்கள் இப்போது வேஷ்டிக்கு திரும்புவதை காண முடிகிறது.தூய வெள்ளை வேட்டி, சட்டை அணிவதை மரியாதையான ஒரு உடை என்பதை உணரத் தொடங்கி விட்டார்கள். அதனால் இப்போது கடைகளில் வேட்டி விற்பனை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேஷ்ட்டி விற்பனை நடந்ததாக கூறுகிறார்கள். அதோடு தற்போது வேட்டி தயாரிப்பு நிறுவனங்கள் வீரம் வேஷ்டி, அஜீத் வேட்டி, தல வேட்டி என்ற பெயரில் வேட்டிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி