செய்திகள்,விளையாட்டு யுவராஜ்சிங்கை வாங்க கோஹ்லி விருப்பம்…

யுவராஜ்சிங்கை வாங்க கோஹ்லி விருப்பம்…

யுவராஜ்சிங்கை வாங்க கோஹ்லி விருப்பம்… post thumbnail image
புதுடெல்லி:-7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 12–ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. ஐ.பி.எல். அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர் யுவராஜ்சிங் உள்ளிட்ட அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

இந்நிலையில் 32 வயதான யுவராஜ்சிங்கை வாங்க, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது விருப்பத்தை அவர் யுவராஜ்சிங்கிடமும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

யுவராஜ்சிங் பேட்ஸ்மேன் மட்டுமின்றி, சுழற்பந்து வீச்சிலும் முத்திரை பதிக்கக்கூடியவர். ஆனால் மோசமான ஆட்டம் காரணமாக யுவராஜ்சிங் இந்திய அணியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி