வீட்டிலேயே பார் வைத்திருக்கும் நடிகை…

விளம்பரங்கள்

மும்பை:- இந்தியில் சாஹெப் பீவி அவுர் கேங்ஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ‘மாஹி கில்‘. சைப் அலிகான் நடித்த புல்லட் ராஜா படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆடியுள்ளார்.

இவர் பிரண்ட்ஸ்களுடன் சேர்ந்தால் போதையில் மிதப்பது சகஜம். கோவாவில் இவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு பல்வேறு மதுபான வகைகளுடன் கூடிய பிரத்யேக பார் வைத்துள்ளார்.இங்கு வரும்போதெல்லாம் எந்நேரமும் போதையிலே மாஹி இருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.புத்தாண்டு தினத்தில் தனது பார் பங்களாவுக்கு வரும்படி பாலிவுட் நடிகர், நடிகைகள் பலருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். புத்தாண்டையொட்டி மகிழ்ச்சியில் திளைக்க பார் முழுவதும் சரக்கு பாட்டில் வாங்கி குவித்திருக்கிறார். இந்த பாரில் பெரும்பாலும் வெளிநாட்டு மதுபானங்கள் குவித்து வைத்துள்ளாராம்.

இது பற்றி மாஹி கூறும்போது, எனது வீடு, நண்பர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த வீட்டை புதுப்பித்ததுடன் பிரத்யேகமாக பார் செட்டிங் அமைக்கப்பட்டது. யார் என் வீட்டுக்கு வந்தாலும் குடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: