பிரதமராகும் தகுதி ராகுலுக்கு உள்ளது-லல்லு பிரசாத் யாதவ்…

விளம்பரங்கள்

பாட்னா:-வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணிக்கு, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ‘பிரதமர் பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும், ராகுல் காந்தியிடம் உள்ளதாக அக்கட்சித்தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “எந்த ஒரு தனிப்பட்ட இனத்துக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையில் ராகுல் காந்தி செயல்படுவதில்லை. அந்த வகையில் நரேந்திர மோடியை விட, ராகுல் காந்தியே சிறந்தவர். நாட்டின் உயர்ந்த பதவிக்கு (பிரதமர்) தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன” என்றார்.

மேலும் வருகிற தேர்தலில், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களிடம் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடப்போவதாகவும் லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: