செய்திகள்,திரையுலகம் த்ரிஷாவின் காதல் முறிவு?…

த்ரிஷாவின் காதல் முறிவு?…

த்ரிஷாவின் காதல் முறிவு?… post thumbnail image
சென்னை:-ராணா தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். திரிஷா தெலுங்கு படங்களில் நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நெருக்கமானார்கள். இருவரும் பட விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள். அருகருகவே உட்காரவும் செய்தார்கள். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. அதனை இருவரும் மறுக்கவில்லை.

சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த பட விழாவுக்கு இருவரும் சென்று இருந்தார்கள். அங்கு நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்தில் ஜோடியாக நடனம் ஆடி சக நடிகர் நடிகைகளை ஆச்சரியப்பட வைத்தனர். சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக வந்து பங்கேற்றார்கள். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று பேசப்பட்டது.
இந்நிலையில் தான் இருவரும் திடீர் என பிரிந்தனர். பட விழாக்களுக்கு இப்போது தனி தனியாக வருகிறார்கள். விருந்து நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக பார்க்க முடியவில்லை. ஒருவர் வந்து விட்டு போன பிறகுதான் மற்றவர் வருகிறார். நேரில் போனில் பேசிக் கொள்வதும் இல்லை. காதல் முறிந்து விட்டதாக பேசப்படுகிறது.

திரிஷா தமிழில் நடித்த என்றென்றும் புன்னகை படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பூலோகம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கன்னட பட மொன்றில் சிவராஜ் குமார் ஜோடியாக நடித்து வருகிறார்.
ராணா தெலுங்கில் தயாராகும் சரித்திர படங்களான பாகுபலி, ருத்ரமாதேவி போன்றவற்றில் நடித்து வருகிறார். இருவரும் பேசிக் கொள்ளாததற்கான காரணம் தெரியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி