செய்திகள்,விளையாட்டு ஒலிம்பிக் செல்ல இந்திய வீரர்களுக்கு நிதியுதவி…

ஒலிம்பிக் செல்ல இந்திய வீரர்களுக்கு நிதியுதவி…

ஒலிம்பிக் செல்ல இந்திய வீரர்களுக்கு நிதியுதவி… post thumbnail image
புதுடில்லி:-ரஷ்யாவின் சோச்சி நகரில், பிப்., 7ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. 17 நாட்கள் நடக்கும் இப்போட்டியில், இந்தியா சார்பில் பனிச்சறுக்கு வீரர்கள் ஷிவா கேசவன், ஹிமான்சு தாக்கூர், நதீம் இக்பால் பங்கேற்கின்றனர்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.,) விதிப்படி தேர்தல் நடத்தாததால், இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், மூவர்ண கொடியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இவர்கள் ஐ.ஒ.சி., கொடியுடன் தான் பங்கேற்கவுள்ளனர். இதனிடையே, இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு மத்திய அரசு இன்னும் போதிய நிதியை தராமல் இழுத்தடிப்பதாகவும், இதனால், ஹிமான்சு தாக்கூர், நதீம் இக்பால் என, இருவரும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவர் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்திய குளிர்கால போட்டி கூட்டமைப்பு தலைவர் சுரேந்திரா சிங் பட்வால் கூறியது:-
ரஷ்ய ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு வீரருக்கும் குறைந்தது ரூ.5 லட்சம் தேவை. இவர்களுக்குத் தேவையான விளையாட்டு பொருட்கள், விலையுயர்ந்த துணிகள் வாங்க வேண்டும்.
இவற்றை வெளிநாட்டில் இருந்து தான் கொண்டு வர வேண்டும். புதிய உபகரணங்களில் வீரர்கள் பயிற்சி பெற அவகாசம் தேவைப்படும்.

பிப்., 7ல் போட்டி துவங்குகிறது என்றாலும், பிப்., 4ல் அங்கு இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் கிளம்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இவைகளை வாங்குவதற்கு எங்களிடம் போதிய பணவசதி இல்லை. மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்கிறோம்.ஒலிம்பிக் வீரர்களுக்கு ‘ஸ்பான்சர்’ இல்லை. மத்திய அரசு உதவவில்லை எனில், குறைந்தது இரண்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்காமல் விலக வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு சுரேந்திரா சிங் பட்வால் கூறினார்.

பணிந்தது அரசு:-இதனிடையே, வீரர்கள், அவர்களுடன் செல்லும் பயிற்சியாளர்களின் பயணம், விளையாட்டு உபகரணங்கள், துவக்க விழாவில் பங்கேற்க தேவையான உடைகள், ரஷ்யாவின் தங்குவதற்கு ஆகும் செலவு என, அனைத்துக்கும் நேற்று மத்திய அரசு நிதி ஒதுக்கியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி