‘வீரம்’ வசூலில் சாதனை…

விளம்பரங்கள்

சென்னை:-சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா ஜோடி சேர்ந்த ‘வீரம்’ படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் தேதி வெளியானது.

நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜித் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார். படத்திற்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வீரம் வெளியான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது.

வீரம் படத்திற்கு சிறுவர்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இப்படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளது.வார இறுதி நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடி வசூலித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: