செய்திகள்,திரையுலகம் அமலாபாலின் பிசினஸ் பார்ட்னராகும் விஜய்…

அமலாபாலின் பிசினஸ் பார்ட்னராகும் விஜய்…

அமலாபாலின் பிசினஸ் பார்ட்னராகும் விஜய்… post thumbnail image
மிகவும் எதிர்பார்த்த ‘தலைவா’ படம் சரியாக ஓடாததால் நடிகை அமலாபாலுக்கு அடுத்து வேறு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தற்போது அவர் நம்பிக்கொண்டிருக்கும் ஒரே படம் தனுஷுடன் நடிக்கும் “வேலையில்லாத பட்டதாரி” பட்டுமே. எனவே நடிப்புத்தொழில் கைவிட்டாலும், நிலையான வருமானத்திற்காக தொழிலதிபராக மாறுவதற்கு முடிவு செய்துள்ளார் அமலாபால்.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ரெஸ்டாரெண்ட் அல்லது ஜவுளிக்கடை ஷோரூம் வைப்பதற்கு ஆலோசனை செய்து வருகிறாராம் அமலாபால். இந்த இரண்டி எது சிறந்த பிஸினஸ் என்று தற்போது தனது நெருங்கிய வட்டாரங்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இவரது தொழிலுக்கு இயக்குனர் விஜய்யும் பார்ட்டனராக சேர விருப்பம் தெரிவித்து உள்ளார். லைப் பார்ட்னராக ஆகவிருக்கும் இருவரும் முதலில் பிஸினஸ் பார்ட்னராக மாற உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அமலாபால், தான் ஆரம்பிக்க உள்ள பிசினஸிற்காக சுமார் ரூ.8 கோடி வரை முதலீடு செய்ய உள்ளராம். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வங்கியும் லோன் தருவதாக உறுதியளித்துள்ளதாம். அனேகமாக இன்னும் இரண்டு மாதங்களில் அமலாபால் பெயரில் திருவனந்தபுரத்தில் ஒரு புதிய ரெஸ்டாரெண்ட் அல்லது ஜவுளி ஷோரூம் ஆரம்பிக்கப்பட்டுவிடும் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி