செய்திகள் 3நிமிடத்தில் 2 கிலோ மாட்டுக்கறி சாப்பிட்ட பெண்…

3நிமிடத்தில் 2 கிலோ மாட்டுக்கறி சாப்பிட்ட பெண்…

3நிமிடத்தில் 2 கிலோ மாட்டுக்கறி சாப்பிட்ட பெண்… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் மூன்றே நிமிடங்களில் 2 கிலோ மாட்டிறைச்சியை மூச்சு விடாமல் தின்று தீர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவின் ஆர்கான் அருகே உள்ள போர்லாண்டு என்ற இடத்தில் சமைக்கப்பட்ட 2 கிலோ ‘ஸ்டீக்’ என்ற மாட்டு இறைச்சியை மாலி ஸ்குயிலர் என்பவர் மூன்றே நிமிடங்களில் தின்று புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

மூன்று கிலோ மாட்டு இறைச்சியை 6 நிமிடம் 48 வினாடிகளில் ஒருவர் தின்றதுதான் இதுவரை உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த சாதனையை மாலி ஸ்குயிலர் முறியடித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி