திரையுலகம் ஹன்சிகாவை காதலிக்கும் சிவா!…

ஹன்சிகாவை காதலிக்கும் சிவா!…

ஹன்சிகாவை காதலிக்கும்  சிவா!… post thumbnail image

ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலித்து வருவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அவர் விளக்கமாக கூறியது.

மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறேன். வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் டாக்டராகணும், என்ஜினீயராகணும்னு கனவு இருக்கிற மாதிரி மான் கராத்தே படத்துல அழகா சிகப்பா ஒரு பெண்ணை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கனுங்கற கனவுல திரிவேன்.

அப்பதான் ஹன்சிகாவை கண்டுபிடித்து வெறித்தனமாக காதலிக்க ஆரம்பிக்கிறேன். அவுங்க நாயை விட கேவலமா விரட்டி விரட்டி விடுவாங்க. ஆனால நான் விட மாட்டேன். அதைவிட கேவலமான ஐடியா போட்டு அவுங்கள எப்படி இம்ப்ரஸ் பண்றேங்றதுதான் கதை. கடுமையான உழைப்பும் முயற்சியும் இருந்தா மொக்க பசங்களால கூட ஹன்சிகா மாதிரி அழகு பெண்களை காதலிக்க முடியும்னு தன்னம்பிக்கை கொடுக்குற படம் தான் மான் கராத்தே.

மீசையெல்லாம் எடுத்துட்டு கொஞ்சம் மார்டன் லுக்குல நடிச்சிருக்கேன். கதைப்படி ஹன்சிகாவுக்கு எல்லா விளையாட்டு மேலேயும் ஆர்வம். ஆனா ஒரு விளையாட்டுகூட விளையாடத் தெரியாது. இந்த வீக்னசை கரெக்டா புடிச்சிக்கிட்டு எப்படி அவங்களோ மனசுல பட்டா போட்டு குடிபோறேன்றதுதாங்க கதை என்கிறார் சிவகார்த்திகேயன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி