விளையாட்டு விசாகப்பட்டினம் ‘மைதானத்திற்கு’ அங்கீகாரம்!…

விசாகப்பட்டினம் ‘மைதானத்திற்கு’ அங்கீகாரம்!…

விசாகப்பட்டினம் ‘மைதானத்திற்கு’ அங்கீகாரம்!… post thumbnail image

விசாகப்பட்டினத்தில் ‘டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி’ கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்துக்கு டெஸ்ட் போட்டிகள் நடத்த அங்கீகாரம் அளிக்க ஆந்திர கிரிக்கெட் சங்கம் கேட்டு உள்ளது .

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாகப்பட்டினம் மைதானத்தை ஆய்வு செய்ய கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டியினர் ஆய்வு செய்து தங்களது அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அளித்தனர். அதில் மைதானத்தில் உள்ள வசதிகள் திருப்தி அளிப்பதாகவும், டெஸ்ட் போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

இக்கமிட்டியில் இடம் பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் சேர்மன் பிஸ்வால் கூறுகையில், விசாகப்பட்டினம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடத்தலாம் என்று பரிந்துரை செய்து அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தவும் ஆலோசிப்போம் என்றார்.

இதனால் விசாகப்பட்டினம் மைதானத்துக்கு டெஸ்ட் போட்டி அங்கீகாரம் விரைவில் வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி