தனுஜை விரும்பும் கமலின் மகள்!…தனுஷ் அதிர்ச்சி…

விளம்பரங்கள்

மும்பை:-கமல்ஹாசன் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன், தனுஷ், அமிதாப் நடிக்கும் புதிய இந்திப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். முதல் படத்திலேயே அமிதாப், மற்றும் தனுஷுடன் நடிப்பதால் அக்ஷரா ஹாசனை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அக்ஷராஹாசனின் புதிய காதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பழம்பெரும் இந்தி நடிகை ரதி அக்னிஹோத்ரியின் மகன் தனுஜ் விர்வானியுடன் அக்ஷரா ஹாசன் நெருங்கி பழகுவதால், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் மும்பையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் கிசுகிசு எழுதப்பட்டு வருகிறது. இந்த கிசுகிசுவை பார்த்த தனுஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை இன்னொருவருடன் காதலில் இருந்தால் அது படத்தின் வெற்றியை பாதிக்கும் என்றும், அதனால் படத்தின் ஹீரோயினை மாற்றிவிடலாம் என்றும் இயக்குனர் பால்கியிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் அமிதாப் இதற்கு உடன்படவில்லை. அக்ஷ்ராதான் ஹீரோயின் என்று அடித்து சொல்லிவிட்டார்.எனவே அக்ஷாராஹாசனின் சென்று படம் முடியும் வரை காதலை மூட்டை கட்டி வைக்குமாறு தனுஷ் அறிவுரை கூறியுள்ளதாக அந்த மும்பை பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: