4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பார்கள் முழு அடைப்பு…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-நபிகள் நாயகம் பிறந்த நாள் ஜனவரி 14-ந்தேதி , திருவள்ளுவர் தினம் ஜனவரி 15-ந்தேதி , வள்ளலார் நினைவு தினம் 17-ந்தேதி , குடியரசு தினம் 26-ந்தேதி,ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்.எல்.2, உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3, உரிமம் கொண்ட ஹோட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் ஏதும் விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் டி.தனசேகரன் கூறும் போது, “கடந்த காலங்களில் ஒரே மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவில்லை இதுவே முதல் முறையாகும்” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: