செய்திகள் ‘சீசன்’ தொடங்கியது குற்றாலத்தில்!…

‘சீசன்’ தொடங்கியது குற்றாலத்தில்!…

‘சீசன்’  தொடங்கியது   குற்றாலத்தில்!… post thumbnail image

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்த வருகிறது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.

குற்றாலம் மலையில் பெய்த மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து மிகவும் அதிகமாக இருந்தது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி முதல் நடைபாலம் வரை விழுந்தது. எனவே, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

குற்றாலத்தில் சபரிமலைக்கு செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் மெயின் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பிச்சென்றனர். ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பிற்பகலில் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி