செய்திகள் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு…

இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு…

இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு… post thumbnail image

தமிழ்நாட்டின் வாக்காளர் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. வாக்காளர் என்ற தகுதியைப் 18 வயது நிறைவு பெறும் நாளாக ஜனவரி 1, 2014 ஆம் ஆண்டு தேதியை அடிப்படையாக வைத்து, சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைமுறையில் இருந்தது. ஜனவரி 1, 2014 ஆம் ஆண்டு அன்று 18 வயது பூர்த்தி அடையக்கூடிய அனைவரும், அக்டோபர் மாதத்தின் கடைசி நாளுக்குள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது .

கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தங்கள், பெயர் இடமாற்றம் போன்றவற்றுக்காக வாக்குச்சாவடிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.

விண்ணப்பங்களை பெறுவதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கைகள் அக்டோபர் 31-ந் தேதி நிறைவடைந்தன. மொத்தம் ஒரு கோடியே 28 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை பரிசீலித்து, தகுந்த திருத்தங்களை செய்துவிட்டு இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரி 6-ந் தேதியன்று வெளியிடுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்திருந்தார்.

ஆனால் 6-ந் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படவில்லை. இறுதி கட்டப்பணிகள் முடிவடையாததால் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் வாக்காளர் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள்தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும். வெளியிடப்படவுள்ள இறுதிப்பட்டியலில் சுமார் 30 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறினார் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி