வில்லியாக நடிக்கும் ‘தமிழ்’ நடிகை!…

விளம்பரங்கள்

நடிகை ‘திரிஷா’ சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் தாண்டுகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். எல்லா படங்களிலும் அவருக்கு கதாநாயகனை காதலிக்கவும் டூயட் ஆடவுமான வேடங்களே அமைந்து இருந்தன.

ஜோதிகா, மொழி, சந்திரமுகி படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். நயன்தாரா, ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்து பேசப்பட்டனர். அனுஷ்காவுக்கு அருந்ததி படம் திருப்புமுனையாக இருந்தது. தற்போது வரலாற்று படங்களில் நடிக்கிறார். இதுபோல் தனக்கும் வித்தியாசமான கேரக்டர் அமைய வேண்டும் என்று திரிஷா எதிர்பார்தார். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.

ஒரு படத்திலேனும் வித்தியாசமாக வந்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாக நடித்து சலித்து விட்டது. வித்தியாசமான வேடம் ஏற்க ஆசைப்படுகிறேன். ‘வில்லி வேடத்தில்’ நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் அது மாதிரி கேரக்டர் அமையும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: