கள்ளக்காதலனுடன் ஓடிய நடிகை…

விளம்பரங்கள்

சென்னை:-மராத்தி மொழி படங்களில் குணசித்திர நடிகையாக நடிப்பவர் அல்கா புனேவர். 44 வயதான இவர் டிசம்பர் 28ந் தேதி திடீரென்று மாயமானர். இது தொடர்பாக அல்காவின் கணவர் சஞ்சய் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் தேடியதில் அவர் சென்னையில் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கார் டிரைவரை பிடித்து விசாரித்ததில் அல்கா தனது கள்ளக்காதலன் அலோக் பலிவாலுடன் ஒடி வந்தது தெரியவந்தது.இதில் ஒரு திடீர் திருப்பமாக நடிகை அல்கா, தன் கள்ளக்காதலன் தன்னிடம் இருந்த நகை பணத்தை அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “நானும் 24 வயதான அலோக் பாலிவாலும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தோம். எங்கள் காதல், என் கணவருக்கு சமீபத்தில் தெரிய வந்தது.அவர் என்னை கண்டித்தார். ஆனாலும் அலோக் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதை உணர்ந்து அவருடன் ஓடிவந்துவிட்டேன். கோபேலி, பெங்களூரில் சில நாட்கள் தங்கி இருந்து விட்டு கடைசியாக சென்னை வந்தோம்.
இங்கு வந்ததும் எனது நகைகள் பணத்தை எடுத்துக் கொண்டு அலோக் ஓடிவிட்டான். அவனை கண்டுபிடித்து எனது நகை பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு அல்கா தனது மனுவில் கூறியிருக்கிறார். அல்காவை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த போலீசார் இப்போது அவரது காதலன் அலோகாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: