18 லட்ச ரூபாய் திருமண மோதிரத்தை விழுங்கிய நாய்…

விளம்பரங்கள்

லண்டன்:-இங்கிலாந்தில் உள்ள டேவன் நகரைச் சேர்ந்த பெண் ஏஞ்சி கோலின்ஸ் (51). தனது வீட்டில் ஜோக் சீவெட் என்ற நாயை செல்லமாக வளர்க்கிறார். கடந்த மாதம் இவர் தனது திருமண வைர மோதிரத்தை மேஜை மீது கழற்றி வைத்தார். அதை தொடர்ந்து கை நக விரல்களில் அலங்காரம் செய்ய பக்கத்து அறைக்கு சென்று இருந்தார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த திருமண மோதிரத்தை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.18 லட்சமாகும். பல இடங்களில் தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை.இதற்கிடையே வீட்டில் வளர்க்கும் நாயின் மலத்தை அங்கிருந்த அகற்றி சுத்தம் செய்யும்போது அதில் திருமண வைர மோதிரம் இருந்தது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அந்த மோதிரத்தை நாய் விழுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மோதிரம் தங்களுக்கு மீண்டும் கிடைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கோலினும் அவரது கணவர் கிரகாமும் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: