விளையாட்டு சானியா “அதிர்ச்சி” தோல்வி!…

சானியா “அதிர்ச்சி” தோல்வி!…

சானியா “அதிர்ச்சி” தோல்வி!… post thumbnail image

இந்த ஆண்டின் முதல் “கிராண்ட்ஸ்லாம்” போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டி “சிட்னி”யில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா இந்தியா-காரா பிளாக் ஜிம்பாப்வே ஜோடி, ஜர்மிலா ஆஸ்திரேலியா-அஜ்லாத் குரோஷியா ஜோடியை எதிர்கொண்டது.

கடந்த ஆண்டில் கலக்கிய சானியா-காரா பிளாக் ஜோடி 3-6, 2-6 என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி