செய்திகள்,தொழில்நுட்பம் உலகின் டாப் 5 வீடியோ கேம்ஸ்…

உலகின் டாப் 5 வீடியோ கேம்ஸ்…

உலகின் டாப் 5 வீடியோ கேம்ஸ்… post thumbnail image
உலகம் முழுக்க விற்பனையில் சக்கைப்போடு போடும் டாப் 5 வீடியோ கேம்கள்:-

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5:-அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த 87 வயதுப் பாட்டி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கொன்றது எட்டு வயதுப் பேரன். துப்பாக்கிச் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டார் பதறிப்போய் போலீஸை அழைக்க, வந்தவர்களுக்கு அதிர்ச்சி. சுட்டு விட்டு அந்த சிறுவன் கொஞ்சமும் பதட்டமும் இல்லாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண் டிருந்தான். ஜி.டி.எ – 5 என்று அழைக்கப் படுகிற ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5’ கேம்தான் அது. சிறையில் இருந்து அப்போதுதான் ரிலீஸ் ஆகிற திருடன், பைக் கில் போய்க்கொண்டிருக்கும் ஒருவனை அடித்து விட்டு, பைக்கைப் பறித்துப் பறக்கிறான். இப்படிப் போகிற வழியெல்லாம் அவன் செய்கிற கிரிமினல் வேலைகளே இந்த கேம்.. 17 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு மட்டும்தான் இந்த விளை யாட்டை விளையாட அனுமதி. கேம் பிளேயரை நிறுத்த மறந்து வேலைக்குப் போன அப்பா இப்போது கோர்ட்டுக்கு அலைகிறார். வெளியான ஒரு மாதத்திலேயே 100 கோடி டாலர்களைக் கல்லா கட்டிவிட்டது.

கால் ஆஃப் டியூட்டு – கோஸ்ட்ஸ் :- வழக்கமான மிலிட்டரி விளையாட்டுதான். ஆனால் லேட்டஸ்ட் வெர்ஷனில் ராணுவ வீரனுடன் அட்வான்ஸான ஒரு நாயும் இணைந்திருக்கிறது. நாயின் தலைக்கு மேல் ஒரு கேமிரா இணைக்கப்பட்டிருப்பதால், எதிரியின் முகாமுக்குள் நுழைந்து உளவு பார்த்துவருகிறது. 60 டாலர் விலை என்றாலும் இளைஞர்கள் வாங்கிக் குவிக்கிறார்கள்.

டோட்டல் வார் – ரோம் 2 :- இந்த கேமுக்குள் நுழையும் போது ஆங்காங்கே சில மக்கள் இருப்பார்கள். அவர்களைக்கொண்டு வீடு கட்டுவது, விறகு வெட்டுவது, கோட்டை கட்டுவது எனப் படிப் படியாக ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும். அந்த நகரம்தான் ரோம். பிறகு பக்கத்து நகரங்களின் மீது படையெடுத்து ரோமின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து, படிப்படியாக ரோம் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க வேண்டும். அசத்தலான கிராபிக்ஸ், சவுண்ட் எஃபெக்ட் என நம்மை ரோம் நாகரிகத்திற்கே கொண்டுசெல்கிறது ‘டோட்டல் வார்’.

அம்னிசியா – எ மிஷின் பார் பிக்ஸ் :- விக்டோரியன் காலத்து பன்றி வெட்டும் தொழிற்சாலைக்குள் போகும் துப்பறியும் மர்ம விளையாட்டு. வீடியோ கேம்ஸ் பற்றிய மதிப்பீடுகள், விமர்சனங்களில் 10க்கு 7 ரேட்டிங் வாங்கி அசத்தியிருக்கிறது. செப்டம்பர் 10 அன்றுதான் இந்த கேம் ரிலீஸ் ஆகியது. ஆனால் இருபதே நாட்களில் டாப்- 5க்குள் வந்துவிட்டது.

வாட்ச் டாக்ஸ் :- இதுவும் ஒரு ஆக்சன் வீடியோ கேம்தான். சிகாகோ நகரத்தைக் கண்காணிக்கும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் துப்பறிய வேண்டும் . நகரத்தில் நடக்கும் பல குற்றங்களைக் கண்டறிவதுதான் நம்முடைய வேலை. பிரதான கேரக்டர் அணிந்து இருக்கும் கண்ணாடி, எதிரில் இருக்கும் மனிதர்களை ஸ்கேன் செய்து அவர்களின் மொபைல் நம்பரில் இருந்து குற்றப் பின்னணி வரை காட்டுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி