செய்திகள்,விளையாட்டு ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் ஓய்வு…

ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் ஓய்வு…

ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் ஓய்வு… post thumbnail image
மெல்போர்ன்:-ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் போட்டி வருகிற 12–ந்தேதி மெல்போர்னில் நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் வேகப்பந்து வீரர் ஜான்சனுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் தொடரை ஆஸ்திரேலியா 5–0 என்ற கணக்கில் வெல்ல காரணமாக இருந்தவர் ஜான்சன். அவர் 37 விக்கெட் கைப்பற்றி இருந்தார். தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் காரணமாக அவருக்கு இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய தேர்வுகுழு ஓய்வு கொடுத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி