செய்திகள் அறையில் முடங்கிய “பயணிகள்”!…

அறையில் முடங்கிய “பயணிகள்”!…

அறையில் முடங்கிய “பயணிகள்”!… post thumbnail image

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் “பனிப்பொழிவு” நிலவி வருகிறது. நேற்று அதிகாலை முதலே அதிகளவில் கடும் மேகமூட்டம் நிலவியதுடன் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தன.

மலைச்சாலைகளில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்றன. பனிமூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் கொடைக் கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா போன்ற இயற்கை அழகினை கண்டு ரசிக்க முடியாதவாறு பனிமூட்டம் காணப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

குறிப்பாக, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தங்கள் அறைகளிலேயே முடங்கி கிடந்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிப்பதற்காக வந்தோம். ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக இயற்கை அழகினை ரசிக்க முடியவில்லை. எனினும் கூடுதலாக ஒருநாள் தங்கியிருந்து இயற்கை அழகினை ரசித்துச் செல்வோம் என்று ஆர்வத்துடன் கூறினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி