சூட்கேசில் மறைந்து அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற பெண் கைது…

விளம்பரங்கள்

நோகல்ஸ்:-அமெரிக்காவின் மெக்சிகோ-அரிசோனா மாகாண எல்லையில் உள்ள நோகல்ஸ் சோதனைச் சாவடியை கடந்து வரும் வாகனங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக நவீன ஹோண்டா ரக கார் படுவேகமாக வந்தது. அந்த காரை நிறுத்தி ‘டிக்கி’ பகுதியில் சோதனை செய்தபோது, அதில் இருந்த கனமான சூட்கேஸ், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதைத் திறந்து பார்த்தபோது, அதில் ஏராளமான துணிகள் இருந்தன. துணிகளை அள்ளி கீழே போட்டுவிட்டு அடிப்பகுதியில் என்ன உள்ளது? என பரிசோதிக்க முயன்றபோது, உடம்பை இரண்டாக மடித்து சூட்கேசுக்குள் பதுங்கிக் கிடந்த தாய்லாந்து நாட்டுப் பெண் திடீரென எழுந்து உட்கார்ந்தார்.

அவரை கைது செய்த போலீசார், உரிய ஆவணங்கள் இல்லாமல், அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குற்றத்திற்காக தாய்லாந்து பெண்ணையும், அந்த காரின் உரிமையாளரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: