அடுத்த பிரதமர் யார்?கருத்துக் கணிப்பில் கெஜ்ரிவாலுக்கு முதலிடம்…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-முக்கிய பத்திரிக்கை நிறுவனம் ஒன்று நாட்டின் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனா மற்றும் அகமதாபாத் ஆகியவற்றில், யார் பிரதமராக வரவேண்டும் என கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்த கருத்துக் கணிப்பில் பா.ஜ பிரதமர் வேட்பாளரான மோடி 58 சதவீத வாக்குகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு 25 சதவீத வாக்குகளுடன் 2ஆம் இடமும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு 14 சதவீத வாக்குகளுடன் 3ஆம் இடமும் கிடைத்துள்ளது.

அதே சமயத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் கெஜ்ரிவாலுக்கு முதலிடமும், மோடிக்கு இரண்டாமிடமும் கிடைத்துள்ளது. மோடியின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் 31 சதவிகிதம் பேர் கெஜ்ரிவால் பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அப்பத்திரிக்கை கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: