விளையாட்டு இந்திய வீரர்களுக்கு “வாய்ப்பு” கிடைக்க வேண்டும் டிராவிட் பேச்சு…

இந்திய வீரர்களுக்கு “வாய்ப்பு” கிடைக்க வேண்டும் டிராவிட் பேச்சு…

இந்திய வீரர்களுக்கு “வாய்ப்பு” கிடைக்க வேண்டும் டிராவிட் பேச்சு… post thumbnail image

சுரேஷ் ரெய்னா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் உத்தரபிரதேச அணிக்காவும், ரோகித் ஷர்மா ரஹானே ஆகியோர் மும்பை அணிக்காகவும் முகமது ஷமி பெங்கால் அணிக்காகவும், ஆல்–ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி கர்நாடக அணிக்காகவும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடக்கூடியவர்கள்.

ஆனால் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பதால் அவர்களை ரஞ்சி கால் இறுதியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை. நியூசிலாந்து தொடருக்காக வருகிற 12–ந்தேதி தான் இந்திய அணி அங்கு புறப்படுகிறது. எனவே ரஞ்சி கால்இறுதியில் இவர்களை பங்கேற்க செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அணி நிர்வாகங்கள் விடுத்த கோரிக்கையை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறுகையில், ‘இந்த 6 வீரர்களும் கால்இறுதியில் விளையாட நல்ல வாய்ப்பு இருந்தது. ஏனெனில் நியூசிலாந்து ஒரு நாள் தொடர், ரஞ்சி கால்இறுதி முடிந்து 7 நாட்கள் கழித்து தான் ஜனவரி 19 வருகிறது.

எனவே 12–ந்தேதிக்கு பதிலாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தாமதமாக கூட இவர்களை நியூசிலாந்துக்கு அனுப்பி இருக்கலாம். இவர்களை ரஞ்சியில் விளையாட அனுமதித்து இருந்தால் அதன் அணிகளும், பயிற்சியாளர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். போட்டிகளும் அதிகமான கவனத்தை ஈர்த்து இருக்கும்’ என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி