கேட்மேன் தகவலால் “ரயில்” விபத்து தவிர்ப்பு…

விளம்பரங்கள்

மும்பையில் இருந்து டேராடூன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை “2.30” மணியளவில் குஜராத் எல்லையோரம் உள்ள “கோல்வாட்” ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தபோது ரயிலின் ஒரு பெட்டி தீ பிடித்து எரிவதை அப்பகுதி ரயில்வே “கேட் மேன்” பார்த்தார்.

உடனடியாக, “வாக்கி டாக்கி” மூலம் தொடர்பு கொண்டு அவர் ரயிலின் ஒரு பெட்டி தீ பிடித்து எரியும் தகவலை கோல்வாட் ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் அவர் தெரிவித்தார்.

பதறிப்போன மும்பை-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்ட், அவசரமாக ரயில் டிரைவரை தொடர்பு கொண்டு உடனடியாக ரயிலை நிறுத்தும்படி கூறினார். இதற்குள் காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ மேலும் 2 பெட்டிகளை பற்றிக் கொண்டது.

வேகம் குறைந்து ரயில் நிற்பதற்குள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையினர் இதர பெட்டிகளுக்கு பரவி விடாதபடி தீயை அணைத்து தடுத்தனர். இந்த விபத்தில் 9 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். காயமடைந்த மேலும் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்தன.

ரயில்வே கேட்மேன் அளித்த தகவலினால் பெரிய தீ விபத்து தடுக்கப்பட்டு பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினார் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: