செய்திகள்,முதன்மை செய்திகள் ‘வெள்ளை தங்கம்’ 6 டன் சீனாவில் அழிப்பு…

‘வெள்ளை தங்கம்’ 6 டன் சீனாவில் அழிப்பு…

‘வெள்ளை தங்கம்’ 6 டன் சீனாவில் அழிப்பு… post thumbnail image
பெய்ஜிங்:-வெள்ளை தங்கம் என்றழைக்கப்படும் யானை தந்தங்கள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது. இங்கு கடந்த ஆண்டு மட்டும் தந்தங்களுக்காக 35 ஆயிரம் யானைகளை விலங்கு வேட்டையாளர்கள் கொன்று இருக்கின்றனர். ஒரு கிலோ யானை தந்தம் கள்ள சந்தையில் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சட்டவிரோதமாக வாங்கும் இந்த தந்தங்களை, மக்கள் தாங்கள் விரும்பும் பொருட்களுக்கு மாற்றி வீட்டில் வைத்து அழகு பார்க்கின்றனர். இவ்வாறு யானைகள் கொல்லப்படுவது குறித்து கவலையடைந்த சீனா அரசு, அதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் கைப்பற்றப்பட்ட 6 ஆயிரம் கிலோ யானை தந்தங்களை பொது இடங்களில் வைத்து நேற்று சீனா அழித்தது. அழிக்கப்பட்ட இந்த தந்தங்கள் சீனாவில் பிடிபட்டுள்ள யானை தந்தங்களின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.

மற்ற நாடுகள் இதுபோன்று யானை தந்தங்களை அழித்ததையடுத்து சீனாவும் பொது இடத்தில் வைத்து அழித்துள்ளது. இருந்தும், எவ்வளவு டன் தந்த குவியல்கள் அங்கு இருக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி